இந்தியாவுடன் மல்லுக்கட்டும் ரஷ்யா.. சந்திரயானுக்கு முன்பே சந்திரனில் சம்பவம்

x

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. தலைநகர் மாஸ்கோவிலிருந்து 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரமுள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1வி என்ற ராக்கெட் மூலம் லூனா 25 விண்கலத்தை ரஷ்யா நேற்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான் -3 விண்கலம் வரும் 23 ந்தேதி நிலவின் தென்பகுதியில் தரையிரக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா நிலவுக்கு லூனா 25 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சந்திரயான் -3 க்கு முன்பே அதாவது வரும் 23 ந்தேதியன்றே நிலவின் தென்பகுதியில் தரையிரங்க கூடும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் தண்ணீர், தனிமங்கள் உள்ளிட்டவை உள்ளனவா என விரைவில் தெரிய வரும்.


Next Story

மேலும் செய்திகள்