பிரிட்டன் முதல் ஸ்வீடன்... "இந்த ஒற்றை ஆவணமே போதும்.." இந்தியர்களுக்கு அடித்தது மெகா லக்..!

x
  • இந்திய ஓட்டுனர் உரிமத்துக்கு, 8 உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது குறித்த விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
  • பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும்
  • ஸ்வீடன் ஆகிய எட்டு நாடுகளில் இந்திய ஓட்டுநர் உரிமம்
  • அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வாகனங்களை சாலையின் இடதுபக்கம் ஓட்டும் முறை அமலில் உள்ளது. கார்கள் மற்றும் இதர வாகனங்களின் ஸ்டியரிங், வலது பக்கம் அமைக்கப்பட்டிருக்கும்.
  • இந்திய ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் பெரும்பாலான
  • நாடுகளில், இதே போல் சாலையின் இடது பக்கம்
  • வாகனங்களை ஓட்டும் முறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பெரும்பாலும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் வாகனங்களை இடதுபுறம் செலுத்தும் முறை அமலில் இருந்து வருகிறது.
  • அதே சமயம் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற வட அமெரிக்க நாடுகளில் வலதுபுறம் வாகனம் ஓட்டும் முறை உள்ளது.
  • உலக அளவில் 75 நாடுகளில் வாகானங்களை இடதுபுறம் இயக்கும் முறையும், 165 நாடுகளில் வலதுபுறம் இயக்கும் முறையும் நடைமுறையில் உள்ளது.
  • ஆனால், பிரிட்டீஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இல்லாத ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில இதர நாடுகளிலும் வாகனங்களை இடதுபுறம் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்