நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கொண்டுவர போராட்டத்தில் குதித்து கல்லெறி - நிலைகுலைந்த போலீசார்

x

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்ட மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் காத்மாண்டு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக சென்ற அவர்களை போலீசார் தடுத்த போது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்ற போது அவர்கள் மீது

போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்