போர் நடுவே போராடும் பிஞ்சு குரல்கள் - முத்தம் கொடுத்த அனுப்பிய பெற்றோர்

x

காசாவில் அல்-ஷிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 பச்சிளம் குழந்தைகளில், 28 குழந்தைகள் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதலால், அல்-ஷிபா மருத்துவமனையில், மின்சாரம், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், குறைபிரசவத்தில் பிறந்த 31 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், 31 பச்சிளம் குழந்தைகளில் 28 குழந்தைகள் வெளியேற்றப்பட்டு, எகிப்துக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 குழந்தைகள், தெற்கு காசாவில் உள்ள் எமராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவை என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்