பாலியல் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு.. ஹங்கேரி நாட்டு பெண் அதிபருக்கு எதிராக போராட்டம்

x

ஹங்கேரி நாட்டு பெண் அதிபராக இருந்தவர், கடாலின் நோவக். இவர், அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறையில் இருந்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இது ஹங்கேரி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த கடாலின் நோவக், " அந்த நபர் மீது குற்றம் இருக்காது என்ற நம்பிக்கையில், பொதுமன்னிப்பு வழங்கினேன்... ஆனால் தற்போது தவறை உணர்கிறேன்... இதற்கு பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்..." என்று அறிவித்தார். மேலும், இதுவே நான் அதிபராக அளிக்கும் கடைசி பேட்டி என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்