"ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் போலியானது" - காசா பகுதி மக்கள்

x

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் போலியானது என காசா பகுதி பொதுமக்கள் அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலும், ஹமாசும் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதாக தெரிவித்துள்ள காசா பகுதி மக்கள், தாங்கள் நிரந்தர போர் நிறுத்தத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தாங்கள் இப்போது, தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளின் மீது அமர்ந்திருப்பதாகவும், ஒரே ஒரு இரவாகிலும் தாங்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றும் அவர்கள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்