கண்முன்னே இடிந்து விழுந்த விமான நிலைய கூரை... பரபரப்பு காட்சிகள்

x

புயல் மழை பாதிப்பு காரணமாக கவுகாத்தி விமான நிலையத்தின் கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடுமையான புயல் மற்றும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கவுகாத்தி விமான நிலைய முனைய கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் டெர்மினல் கட்டிடத்திற்கு வெளியே நீர் மற்றும் காற்றின் அழுத்தம் காரணமாக, முன்புற பகுதியில் உள்ள கூரையின் ஒரு சிறிய பகுதியானது இடிந்து விழுந்தது. தொடர்ந்து, விமான நிலையத்தின் செயல்பாடுகள், 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்