ரயில் நிலையத்தில் புகுந்து துப்பாக்கி சூடு... அலறிய பயணிகள்... ஒருவர் பலி

x

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பிரான்க்ஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரான்க்ஸ் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்