`குட் நைட்' நடிகைக்கு திருமணம்.. - வைரலாகும் போட்டோக்கள்

x

குட் நைட் பட நாயகி மீதா ரகுநாத்திற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதலும் நீ முடிவும் நீ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மீதா ரகுநாத்திற்கு குட் நைட் படம் திருப்புமுனையாக அமைந்தது. யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மீதாவிற்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருங்கால கணவருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்