ஜி 20 மாநாடு..! உலக தலைவர்கள் கவனத்தை ஈர்த்த "கோனார்க்" சக்கரம் | G 20 Summit

x

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி உலகத் தலைவர்களை வாயிலில் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்... அப்போது சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் பகுதிக்கு பின்னால் கோனார்க் சக்கரம் இடம்பெற்று இருந்தது... ஒடிசாவை சேர்ந்த இந்த கோனார்க் சக்கரம் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது... இந்த சக்கரம் மற்றும் அதில் உள்ள 24 ஆரங்கள் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளன... இந்தியாவின் பழமையான நாகரீகம், அறிவு, கட்டடக்கலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இச்சக்கரம் திகழ்கிறது. இச்சக்கரத்தில் உள்ள சுற்றி வரும் அமைப்பு காலச் சக்கரத்தை அடையாளப் படுத்துவதோடு ஜனநாயக சிந்தனைகள், சமூகத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்