"தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்"...விவேக் ராமசாமி கொடுத்த ஷாக்

x

2024 நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட டிரம்ப் திட்டமிட்டுள்ளார். டிரம்பின் கட்சியான குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளரை தேர்வு செய்ய மாகாண வாரியாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் டிரம்ப்புடன், ரான் டீசன்டீஸ், நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில், முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 38 வயதான விவேக் ராமசாமி, உள்கட்சி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக கூறி, டிரம்பிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அதிபர் டிரம்ப் தான் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப்பை பாராட்டியிருந்த விவேக், அவருக்கு வயதாகி விட்டதால், அடுத்த தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்