"அட, இப்படி ஒரு அசாத்திய திறமையா..!" இணையத்தை கலக்கும் ஆச்சரியமூட்டும் வீடியோ

x

சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நதி ஒன்றில் சிலர் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விலங்கு ஒன்று அந்த ஆற்றை நீந்தி கடந்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அருகே சென்று பார்த்தபோது, அது பூமா என்ற விலங்கு என தெரியவந்தது. பூனை குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு, அமெரிக்காவில் மலைச் சிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த விலங்கு, பெரிய நீர் நிலைகளை அநாயாசமாக நீந்தி கடக்கும் இயல்பை கொண்டது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும், தன்மேல் மொய்க்கும் ஈக்களிடமிருந்து தப்பிக்கவும் இந்த விலங்குகள், நீர் நிலைகளில் நீந்தும் என்றும் அவர்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்