ஊர் சுத்தி பாக்க வேற லெவல் ஸ்பாட் பொலிவியா நாட்டுக்கு கொண்டாட்ட பயணம் ஊர் விட்டு டூர் கிளம்பளாம் வாங்க

x

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, மகாகனம் பொருந்திய மக்களே... இளசுகளே.... சுட்டிக்குழந்தைகளே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது எங்கள் சன்டே டூர்...

எனக்கு தெரியும் ஐபிஎல் ஆரம்பிச்சுடுச்சி... நீங்களாம் கோடி ரூபாய் குடுத்தாலும் என்கூட டூருக்கு வர மாட்டிங்கனு.... அதனால தான் இந்த வாரம் பிரம்மிப்பு மேல பிரமிப்பா, அட்டாகாசத்துக்கே அப்பாட்டக்கரா, கொண்டாட்டத்துகே படுஜோரா இருக்குற ஒரு நாட்டோட பக்கட் லிஸ்ட்ட அள்ளி போட்டு கொண்டு வந்திருக்கோம்.

ஆமாங்க.... இன்னிக்கு நம்ம ஊர சுத்தி பாக்க போற நாடு.... பொலிவியா....!

இங்க என்ன இருக்கு ஏது இருக்குனு தெரிஞ்சிகறதுக்கு முன்னாடி....ஏண்டா உனக்கெல்லாம் சூடு சொரண இருக்கா...சோத்துல உப்பு போட்டு தான சாப்டுறயானு யாராச்சும் கேட்டா நமக்கு ஆத்திரம் பீறிட்டு வரும்...


வடிவேலு பாணியில சொல்லனும்னா உப்பு போட்ட ஊறுகாய தான் சாப்டு இருக்கோம். ஆனா இந்த நாட்டுக்காரங்க..... உப்புல ஒரு சிட்டியவே கட்டி வச்சி மாஸ் காட்றாங்க..

உப்பால் உருவான கண்ணாடி நகரம்...

உப்ப வைச்சி ஒரு சிட்டியவே கட்டியிருக்காங்கனா பொலிவியன்ஸ மிகப்பெரிய கோவக்காரங்களா இருப்பாங்களோனு நெனைக்கவேண்டாம். ரொம்ப தன்மையானவங்க... இவங்களோட பழக்கவழக்கம், கலாச்சாரம், விருந்தோம்பல் எல்லாமே பாண்டவர் பூமி மாதிரி ரொம்பவும் பாசமானது.

மேற்கு மத்திய தென் அமெரிக்காவுல அமைந்திருக்கும் இந்த நாடு நிலத்தால் சூழப்பட்ட ஒரு அழகான சொர்கபூமி.

இதோட மொத்த பரப்பளவு 10,98581 சதுர கிலோமீட்டர். பெரு, சிலி, பெராகுவே, பிரேசில், அர்ஜண்டினா, போன்ற பிரலமான நாடுகள் தான் இந்த பொலிவியாவோடு அரண். ஆனா இந்த நாட்டோட பெரும்பாலான பகுதி ஆண்டிஸ் மலைத்தொடருக்குள்ள மறஞ்சி இருக்கு.

அமேசான் காடு... அமேசான் காடுனு நம்மலாம் நிறையா படிச்சி இருப்போம்...கேள்விபட்டிருப்போம்.... அந்த அமேசான் காடுகளோட பெரும்பான்மையான பகுதிகள் இந்த பொலிவியா நாட்டுல தான் டச் ஆயிட்டு போகுது. அதுனால இங்க பல வகையான உயிரனங்கள் பரவலா இருக்குறத நம்மால பாக்க முடியும்...


Next Story

மேலும் செய்திகள்