ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி..! தங்கம் வென்ற இந்திய வீரர் | Asian Games 2024

x

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அகில் ஷெரோன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 460 புள்ளிகள் பெற்று அகில் ஷெரோன் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார். இதே பிரிவில் ஐய்ஸ்வரி பிரதாப் சிங் 459 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த தொடரில் பதக்க வேட்டை நடத்திவரும் இந்தியா, 24 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது


Next Story

மேலும் செய்திகள்