சிங்கப்பூர் அதிபராகும் தமிழ் வம்சாவளி?

x

சிங்கப்பூரில் இன்று நடைபெறும் அதிபர் தேர்தலில்

தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னத்துக்கு

வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்

வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை

என்று அறிவித்தார். இந்நிலையில் புதிய அதிபரை

தேர்ந்தெடுக்க சிங்கப்பூரில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்த இங் கொக் செங் , டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிங்கப்பூர்

அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த

2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில்

இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பிரதமரின் ஆலோசகர், துணை பிரதமர், நிதியமைச்சர் , கல்வியமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்