4 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத திமிங்கலம் கண்டுபிடிப்பு

x

சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Perucetus இன திமிங்கலத்தின் புதைபடிமங்கள் பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 66 அடி நீளமும், சுமார் 3லட்சத்து 40 ஆயிரம் கிலோ கிராம் எடையும் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது இன்றைய நீலத் திமிங்கலங்கள், அக்கால டைனோசர்களைக் காட்டிலும் மிகப்பெரிய விலங்கினமாக இருந்திருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தெற்கு பெருவின் கடலோர பாலைவனத்தில் 13 முதுகெலும்புகள், 4 விலா எலும்புகள் மற்றும் 1 இடுப்பு எலும்பு ஆகிய திமிங்கல புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்