தொடங்கியது "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடு

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது...
x
தொடங்கியது "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடு

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் 2ஆவது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் விவகாரம், உக்ரைன் மீதான ரஷ்யா போர், உலகளாவிய பிரச்னைகள் குறித்து நான்கு நாடுகளின் தலைவர்கள் விவாதம் நடத்திவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்