ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது.
x
ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபைக்கான இந்திய தூத‌ரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல், ஐ.நா அவை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து, உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஐ.நா அவையின் ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்புத்துறை துணை இயக்குநர் மிடா ஹோசாலியிடம் 8 லட்சம் அமெரிக்க டாலருக்கான காசோலையை, ஐ.நாவுக்கான இந்திய தூத‌ர் ரவீந்திரா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்