"உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசும்படி புதினுக்கு ஆலோசனையும் கூறினேன்" - பிரதமர் மோடி
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி உக்ரைன் விஷயம் கவலைக்குரிய ஒன்றாக இருக்கும் தருணத்தில் இந்த உரையாடல் நிகழ்கிறது என்றார். சில வாரங்களுக்கு முன்பு, உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி பரிதவித்து வந்ததாகவும் அவர்களில் பலர் மாணவர்கள் என குறிப்பிட்டார். கொரோனா காலத்தில் நாம் சந்தித்த சர்வதேச அளவிலான சவால்கள், சுகாதார பாதுகாப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சில விஷயங்கள் தற்போது கவனத்தில் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக, பலமுறை தாம் பேசியதாகவும், அமைதி காக்கும்படி இருவருக்கும் வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசும்படி அதிபர் புதினுக்கு ஆலோசனையும் கூறியதாக மோடி குறிப்பிட்டார். உக்ரைன் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி பைடனிடம் கூறியுள்ளார்.
Next Story