"குழந்தைகளுக்கு கூட பால் கிடைப்பதில்லை" - இலங்கை முன்னாள் எம்.பி. வேதனை!

இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்தால் அந்நாட்டு மக்கள் தமிழகம் வரும் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
x
கொரோனாவால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி அல்ல, ஊழலால் தான் என இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் அரசு அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என்றும் சமையல் எரிவாயு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்தால் கிடைப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு கூட பால் கிடைப்பதில்லை என வேதனைப்பட்டுள்ள அவர், பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கும் முருங்கைகாய் 1,500 ரூபாய்க்கும் விற்பனையாவதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்