ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - ஆஸ்திரேலியா அறிவிப்பு | ThanthiTv
மாரடைப்பால் மரணமடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவிற்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்து உள்ளது.
மாரடைப்பால் மரணமடைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவிற்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்து உள்ளது. மெல்போர்ன் நகரில் வார்னேவின் இறுதிச் சடங்கு அரசு சார்பில் நடைபெறும் என்றும், வார்னேவின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் விக்டோரியா மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மார்டின் பகுலா கூறி உள்ளார். இதனிடையே, ஷேன் வார்னேவின் உடலை தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு செல்வதற்கான பணிகளில் அந்நாட்டு அரசு முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளது.
Next Story
