உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் - வெளியுறவு செயலாளர் தகவல்
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்கள் ஆயிரம் பேரை, ரோமானியா மற்றும் ஹங்கேரி வழியாக வரவழைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்கள் ஆயிரம் பேரை, ரோமானியா மற்றும் ஹங்கேரி வழியாக
வரவழைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தல்களை கொடுத்து வருவதாக கூறினார். போர் தொடங்குவதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் இந்திய வந்தடைந்துள்ளதாகவும்,
தற்போது 15 ஆயிரம் பேர் அங்கு இருப்பதாகவும் கூறினார். உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு சாலை வழியாக வரவழைத்து, அங்கிருந்து விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.இதனிடையே, கார்கிவ், சுமேய், கீவ் நகரங்களில் தொடர்ச்சியாக கடும் சண்டை நடந்து வருவதால், இந்த நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் ஊரடங்கு அமலில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் ரயில் நிலையம் செல்ல வேண்டாம் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story