"சூரியகாந்தி விதையை வைத்துக்கொள்.. நீ இறந்து மண்ணில் புதைந்த பின் பூக்கள் மலரட்டும்" - உக்ரைன் பெண்

"சூரியகாந்தி விதையை வைத்துக்கொள்.. நீ இறந்து மண்ணில் புதைந்த பின் பூக்கள் மலரட்டும்" - உக்ரைன் பெண்
x
உக்ரைனில் போர் தொடுக்கிறோம் என 24ம் தேதி காலை ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்ட நொடியில் இருந்து இந்த நிமிடம் வரை உக்ரைனில் நீடிக்கும் தாக்குதல்களும், பொதுமக்களின் கதறல்களும் காண்போரை கலங்கடித்து வருகின்றன.

பல உயிர்களை காவு வாங்கி வரும் இந்த போர்க்களத்தில், நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதத்தில் உக்ரைனியர்கள் செயல்பட்டு வருவது காண்போரை சிலிர்க்க வைக்கிறது.

இதற்கு ஆரம்ப புள்ளி உக்ரைன் ராணுவ படைதான்... 

உக்ரைனின் பாம்பு தீவை கைப்பற்ற சென்ற ரஷ்ய படைகள், ஆயுதங்களை கீழே போட்டு சரண்டர் ஆகிவிடுங்கள் என எச்சரித்தது. ஆனால் அடிபணியாத உக்ரைன் துருப்புகள், அவர்களை கடுமையாக வசைபாடி எதிர்ப்பை பதிவு செய்தனர். 


இதையடுத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் தீவில் இருந்த 13 வீரர்களும் வீரமரணமடைந்தனர்.

இது ஒருபக்கம் இருக்க, உக்ரைன் எல்லையான கிரிமியாவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னோக்கி வர, நகரை இணைக்கும் முக்கிய மேம்பாலத்தில், மனித வெடிகுண்டாக மாறி பாலத்தை தகர்த்ததோடு, ரஷ்யாவின் திட்டத்தை முறியடித்து உக்ரைனியர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார் அந்நாட்டு போர் வீரர் Vitaliy Skakun...


கெர்சன் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றிய நிலையில், அங்கு வசிக்கும் பெண் ஒருவர் ரஷ்ய வீரரிடம் சென்று, சூரிய காந்தி விதையை உன் பாக்கெட்டில் வைத்துக்கொள்.. நீ இறந்து மண்ணில் போன பிறகு இங்கு பூக்கள் மலரட்டும் என ஆவேசமாக பேசினார்.

சுஹியூவ் நகரில் ரஷ்யாவின் விமானப்படை தாக்குதலில் சிக்கி ஹெலினா என்ற ஆசிரியர் குண்டடி காயத்துடன் களத்தில் கதறும் புகைப்படங்கள் போரின் வலியை உலகுக்கு உணர்த்திவிட்டது..



வீரர்கள், பொதுமக்கள் இப்படி வீர தீர செயல்களில் ஈடுபட, அந்நாட்டு அதிபரோ ஒருபடி மேலே சென்று மக்களை பெருமைப்படுத்தியுள்ளார்.

ரஷ்யர்கள் உங்களை தாக்கக்கூடும்... கியூ நகரை விட்டு வெளியேறுங்கள் என அமெரிக்கா கூற, எனக்கு பயணங்கள் வேண்டாம், கூடுதலாக ஆயுதங்களை வேண்டுமானால் தாருங்கள் என அவர் கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.

போர் உயிரிழப்புகள் ஒருபக்கம், மக்களின் அடிபணியாத வீரம் மறுபக்கம். இதுதான் உக்ரைனின் தற்போதைய நிலை...





Next Story

மேலும் செய்திகள்