உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களை காக்கவே போர் - புதின்

இரு நாட்டு ஒப்பந்தத்தை மீறியதா உக்ரைன்? ரஷ்யா கேட்டதும்... உக்ரைன் மறுத்ததும்...
x
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விவகாரம் மற்றும் நேட்டோ படை விவகாரம் முக்கிய காரணமாக இருக்கிறது. உக்ரைனில் கடந்த 2014 ஆம் ஆண்டு நேரிட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிகமாக இருக்கும் உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதே கிழக்கு உக்ரைனில், டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அங்கு போரை நிறுத்த இருதரப்பு இடையே மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஒப்பந்தப்படி டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் மாகாணங்களுக்கு உக்ரைன் சிறப்பு அந்தஸ்து மற்றும் குறிப்பிடத்தக்க தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் மற்றும் அங்கு தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், உக்ரைன் சிறப்பு அந்தஸ்தை வழங்க மறுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இரு பகுதிகளிலும் முழு நிலப்பரப்பும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும், அவ்வாறு இல்லாமல் அங்கு தேர்தல் நடத்தினால் ரஷ்யாவின் ஆதிக்கமே மேலோங்கும் என உக்ரைன் கூறியது. இவ்வாறு இருதரப்பும் மின்ஸ்க் ஒப்பந்தம் தொடர்பாக மாறி, மாறி குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டியது. இதனையும் ரஷ்யா எதிர்த்தது. மறுபுறம் உக்ரைனை நேட்டோவில் இணைக்க மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களை காப்பதாக புதின் போரை முன்னெடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்