13 போர் வீரர்களுக்கு "Hero of Ukraine" பதக்கம் - பாம்புத் தீவில் நடந்தது என்ன?

உக்ரைன் - ரஷ்யா போரில், சரணடைய மறுத்த 13 உக்ரைன் ராணுவ வீரர்கள், ரஷ்ய போர் கப்பலில் பீரங்கி குண்டுகளுக்கு பலியானார்கள்.
x
உக்ரைன் - ரஷ்யா போரில், சரணடைய மறுத்த 13 உக்ரைன் ராணுவ வீரர்கள், ரஷ்ய போர் கப்பலில் பீரங்கி குண்டுகளுக்கு பலியானார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் ராணுவ வீரர்கள் உக்கிரமாக போராடி வருகின்றனர். உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில், கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று முற்றுகை இட்டு தாக்குதல் நடத்தியது. மிகச் சிறிய தீவான பாம்புத் தீவை பாதுகாக்கும் பணியில் 13 உக்ரைனியா ராணுவ வீரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். உயிர் சேதத்தை தவிர்க்க அவர்களை சரணடையுமாறு, ரேடியோ மூலம் ரஷ்ய போர் கப்பல் கேப்டன் கேட்டுக் கொண்டார். ஆனால் சரணடைய மறுத்த அந்த 13 வீரர்கள், ரேடியோவில் ரஷ்ய போர் கப்பலை ஏசுவது பதிவாகியுள்ளது. கப்பலின் பீரங்கி குண்டுகளுக்கு பலியாகிய அந்த 13 உக்ரைனிய ராணுவ வீரர்களின் தீரத்தை புகழ்ந்த உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி , அவர்கள் அனைவருக்கும் Hero of Ukraine பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்