உக்ரைன் மீதான ரஷ்யாவின் வெறியாட்டம் : பலி எண்ணிக்கை 137 ஆக உயர்வு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் வெறியாட்டம் : பலி எண்ணிக்கை 137ஆக உயர்வு
x
முன்னதாக பேசிய உக்ரைன் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர், 57 பொதுமக்கள் இறந்ததாகவும், மேலும் 169 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே இது குறித்து பேசிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி பலி எண்ணிக்கை 137 ஆகவும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 316 ஆகவும் அதிகரித்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் ராணுவ வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலியான பொதுமக்களில் ஒரு குழந்தையும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அடையைச் செய்துள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நாட்டில் 83 தரை இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் நாள் இலக்கை முழுமையாக நிறைவடையச் செய்துள்ளதாகவும் ரஷ்ய நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தரப்பில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்