நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

நேபாள நாட்டில் அமெரிக்க நிதியுதவி பெற்ற உட்கட்டமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
x
நேபாள நாட்டில் அமெரிக்க நிதியுதவி பெற்ற உட்கட்டமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் நிதியுதவி பெறும் எம்சிசி நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு நேபாளத்தில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் வழிப் பாதை அமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒப்பந்தம் செய்தது. இது சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்