முட்டைகோஸை தவிர வேறு சாப்பாடு இல்லை - வுஹானை மிஞ்சும் கொரோனா பாதிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்திராத மோசமான கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளது, சீனாவின் ஹாங்காங் நகர்...
x
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டதாக கருதப்படும் கொரோனாவால் உலக நாடுகள் படாதபாடு பட்டு வருகின்றது. ஆனால், கொரோனா வந்த தடம் தெரியாமல் விரட்டியடித்த நாடு... சீனா. 



நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... கடும் குளிருக்கு நடுவே பரிசோதனை செய்து கொள்ளவே கால் கடுக்க நிற்கும் மக்கள்... என தற்போது மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.... சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட ஹாங்காங் பிராந்தியம்... 


இரண்டு ஆண்டுகளில் 12 ஆயிரம் பாதிப்புகளை மட்டுமே சந்தித்திருந்த ஹாங்காங்... கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் பாதிப்புகளை சந்தித்துள்ளது. 


கொரோனாவால் அல்லல்படும் மக்கள் ஒருபுறமிருக்க... மறுபுறம் சாப்பிட கூட எதுவும் இன்றி தவிக்கும் பரிதாப நிலை அங்கு ஏற்பட்டுள்ளது... 

ஓட்டுனர்கள்...கடைக்காரர்கள்... என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால்... உணவு பொருள் கிடைக்கவே திண்டாட்டம் என்ற நிலை ஹாங்காங் நகரில் உள்ளது. 


பிடித்திருக்கோ... பிடிக்கலையோ... தற்போதைய நிலையில், சீனாவில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட ஒரே காய்கறியான முட்டைக்கோஸை தான் சமைத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஹாங்காங் வாசிகள். 


விரைவில் முட்டை, இறைச்சி போன்றவை ஹாங்காங்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... 

 
ஹாங்காங் நகரில் தினமும் 7 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஹாங்காங் தலைவர் பதவிக்கான தேர்தலும் அங்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வுஹானை போல் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் ஹாங்காங் தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து கப்பல் அல்லது தரைவழியாக சீனாவிற்கு நுழைபவர்களை கண்டறிந்து கூறினால் இந்திய மதிப்புப்படி 3 லட்சம் ரூபாய் வரை சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளன, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பல நகரங்கள். 

இப்படி, கொரோனா ஐந்தாவது அலை கைமீறி போக காரணம் ஹாங்காங்கில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விகிதம் மிக குறைவு..

அங்கு 70 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்களில் வெறும் 43 சதவீதம் பேரும், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 27 சதவீதம் பேரும் மட்டுமே  இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.



பல நாடுகளுக்கு தனது தடுப்பூசிகளை சப்ளை செய்து வரும் சீன அரசு, ஹாங்காங்கில் போதிய தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்