உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. உலக தலைவர்கள் மாநாட்டிற்கு விரைந்த கமலா ஹாரிஸ்

உக்ரைன் - ரஷ்யா மீதான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு குறித்த உலக தலைவர்களின் முன்ச் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனிக்கு வருகை தந்தார்.
x
உக்ரைன் பள்ளி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் போர் தொடங்கியதாக இருநாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் நிலைமையை கட்டுபடுத்தும் விதமாக பாதுகாப்பு குறித்த உலக தலைவர்களின் மாநாடு ஜெர்மனியின் முன்ச் பகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கால்ஸ், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், லதுவியா, லிதுனியா மற்றும் ஈஸ்டோனியா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் போர் நெருக்கடியால் உக்ரைன் வளர்ச்சி பாதிக்கப்படுவது குறித்து கலமா ஹாரிஸ் எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளார். ஒருவேளை போர் மூண்டால் பொருளாதாரம், நேட்டோ நாடுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா தயாரிக்க இருப்பதையும் கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டுவார் என கூறப்படுகிறது. அதேநேரம் இருநாட்டு போர், எந்த விதத்திலும் பொருளாதார வளர்ச்சியை பாதித்திட கூடாது என்பதிலும் அமெரிக்கா கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்