அமெரிக்காவில் இந்திய வாசனை திரவியம் அறிமுகம் | Zighrana |

ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம் நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
x
ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம் நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரோஜா இதழ்கள், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்த வாசனை திரவியம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவரும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கலாச்சார தலைநகரான நியூயார்க்கில் இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்தும் புத்தம் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் என ஜிக்ரானா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜிக்ரானாவின் தாய் நிறுவனம்1911 ஆம் ஆண்டு முதல் வாசனை திரவியங்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்