3000 கிலோ ஹெராயின் பறிமுதல் விவகாரம் - தலிபான்களுக்கு தொடர்பு..?

குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் சிக்கிய விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
குஜராத் துறைமுகத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில், 2 கண்டெய்னர்களில் முக பவுடர் என்ற பெயரில் மூன்றாயிரம் கிலோ ஹெராயின் பவுடர் இருப்பது தெரிந்தது. ஆய்வு செய்தபோது, அது ஹெராய்ன் என உறுதி செய்யப்பட்டதோடு, சர்வதேச சந்தையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது எனவும் அறியப்பட்டது. 

இது தொடர்பான விசாரணையில், விஜயவாடா நிறுவனம் என தெரிந்தது. அதை நடத்தி வந்த சென்னையை சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் வைசாலி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது 

இதையடுத்து, சென்னை, நொய்டா, கோவை, டெல்லி, அகமதாபாத், மந்த்வி, காந்திதம், விஜயவாடா  உள்ளிட்ட இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். 
இந்த சோதனையின்போது, டெல்லியில் 16 புள்ளி 1 கிலோ ஹெராய் மற்றும் 10 புள்ளி 2 கிலோ கொகைனும் சிக்கியுள்ளது. இதுபோல, நொய்டாவில் 11 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் ஆப்கானியர்கள் எனவும் ஒருவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்