கட்டாய கொரோனா தடுப்பூசி - ஆதரவாளர்கள் Vs எதிர்ப்பாளர்கள் மோதல் வெடிக்கும் சூழலால் பரபரப்பு

கனடாவின் டொரன்டோ நகரில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பலரும், ஆதரவாக வெகு சிலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
x
கனடாவின் டொரன்டோ நகரில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பலரும், ஆதரவாக வெகு சிலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். "சுதந்திர வாகன அணிவகுப்பு" என்ற பெயரில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரக்குகளுடன் ஓட்டுநர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ட்ரக்குகள் வரிசை கட்டி நிற்பதால் நகரங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. இதையடுத்து தடுப்பூசிக்கு ஆதரவாக வெகு சிலரும் தற்போது போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானது.


Next Story

மேலும் செய்திகள்