உலக நாடுகளும் - உக்ரைன் நெருக்கடியும் - விரைவில் ரஷ்யாவிற்கு பிரான்ஸ் அதிபர் பயணம்

உக்ரைனை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.புதினின் நெருங்கிய நண்பரும், ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான பல்கேரிய நாட்டின் பிரதமருமான விக்டர் ஆர்பன், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
x
உக்ரைனை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.புதினின் நெருங்கிய நண்பரும், ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான பல்கேரிய நாட்டின் பிரதமருமான விக்டர் ஆர்பன், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களை சந்தித்த அதிபர் புதின், உக்ரைன் பாதுகாப்பு மீது அமெரிக்காவிற்கு அக்கறை இல்லை என்றும் உக்ரைனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ரஷ்யாவை ஒடுக்க நினைக்கிறது அமெரிக்கா என்றும் குற்றம்சாட்டினார். ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் உக்ரைன் நேட்டோவிடம் இணைந்துவிட்டால் ரஷ்யாவின் பாதுகாப்பு என்னவாகும் என்பதே யோசித்தே அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். ரஷ்யாவின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்ற நிலையில், விரைவில் உக்ரைன் விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்படும் என புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் போருக்கு தயாராகி வரும் ரஷ்யா, இன்னும் மேற்கத்திய நாடுடனான பேச்சுவார்த்தையை விருப்புவது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்