ரூ.500க்கு வாங்கப்பட்ட மர நாற்காலி - ரூ.16.4 லட்சத்திற்கு விலை போன அதிசயம்

இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தான் வெறும் 500 ரூபாய்க்கு வாங்கிய மர நாற்காலியை 16 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
x
இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் தான் வெறும் 500 ரூபாய்க்கு வாங்கிய மர நாற்காலியை 16 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரைட்டன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பழைய நாற்காலி ஒன்றை 500 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அவரது வீட்டிற்கு வந்து அந்த நாற்காலியைப் பார்த்த நபர் ஒருவர், அந்த மர நாற்காலியில் 20ம் நூற்றாண்டில் இருந்த பள்ளியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததைக் கேட்டு அப்பெண் ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அந்த நாற்காலி 1902ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த கோலோமன் மோசர் என்பவரால் உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்ட நிலையில், அந்த மர நாற்காலியை ஏல நிறுவனம் ஒன்று 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்