ஊரடங்கால் ஒரே வீட்டிற்குள் சிக்கிய ஜோடி - நண்பர்கள் காதலர்கள் ஆன கதை...

சீனாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு இளம் ஜோடியின் திருமணம் உறுதி ஆகியுள்ளது.
x
சீனாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு இளம் ஜோடியின் திருமணம் உறுதி ஆகியுள்ளது.

சீனாவின் பாவோஜி நகரில் வசிக்கும் 28 வயதான ஸாவோ ஸியோகுவிங்  என்ற பெண்ணிற்கு இணைய தளம் மூலம் ஸாவோ பெய் என்ற 28 வயது ஆணுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஸாவோ பெய்யை நேரில் சந்தித்து பேச, அவரின் கிராமத்திற்கு டிசம்பர் மத்தியில் சென்ற போது, கொரோனா பரவல் காரணமாக அந்த பகுதியில் திடீரென்று கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேறு வழியின்றி, ஸாவோ பெய்யின் வீட்டில் அவரின் குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்க வேண்டியதாயிற்று. இதனால் ஏற்பட்ட நெருக்கத்தினால், இவர்கள் இருவரிடையே காதல் மலர்ந்தது. எதிர் வரும் சீனப் புத்தாண்டில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்