ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு - ஒப்புக் கொண்ட நாமல் ராஜபக்சே

ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு ஏற்பட்டு உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
x
எந்த அரசியல்வாதிக்கும் மக்களின் செல்வாக்கு எல்லா காலங்களிலும் உச்சத்திலேயே இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நாமல் ராஜபக்சே,  திடீரென்று ரசாயன உர பயன்பாட்டை ரத்து செய்த தீர்மானம், மக்களின் ஆதரவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் ராஜபக்சேக்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தான் ஒப்புக் கொள்வதாகவும் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்