ஒரே வாரத்தில் 2வது ஏவுகணை சோதனை - உலகை அதிர வைக்கும் கிம் ஜாங் உன்

வடகொரியா ஒரே வாரத்தில் 2வது முறையாக ஏவுகணை சோதனையை நிகழ்த்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், "இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல" என்று கூறினார்.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஒரே வாரத்தில்  2 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், வடகொரியாவின் வெற்றிகரமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் அந்நடடுத் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'ஹைபர்சோனிக்' எனும் ஒலியை விட 5 மடங்கு வேகமாகப் பாய்ந்து துல்லியமாக இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை சோதனைக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், கிம் ஜாங் உன் கலந்து கொண்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் முதன் முறையாக ஏவுகணை சோதனையின் போது அதிகாரப் பூர்வமாக அவர் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்