இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரபல கால்பந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் பங்குபெறும் வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதோடு அவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த வாரம் அணி வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என15 ஆயிரத்து 189 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்