பட்டம் விட்ட இளைஞர் பட்டத்தோடு பறந்ததால் பரபரப்பு

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியில், ராட்ச பட்டங்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை, பட்டம் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியில், ராட்ச பட்டங்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை, பட்டம் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் சிலர் ஒன்று கூடி பட்டங்களை இணைத்து, ராட்சத பட்டம் ஒன்றை பறக்க விட்டுள்ளனர். அப்போது, கயிற்றை பிடித்திருந்த இளைஞரும், பட்டத்துடன் சேர்ந்து பறந்துள்ளார். வானில் அதிக உயரம் பறந்த இளைஞரை, கீழிறக்க முடியாமல் உடனிருந்த நண்பர்கள் திணறினர். இந்நிலையில், பட்டம் சற்று கீழிறிங்கியதும், இளைஞர் கயிற்றின் பிடியை விட்டுள்ளார். இதில், இளைஞர் கீழே விழுந்த நிலையில், காயங்களுடன் உயிர் தப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்