சிலி நாட்டின் அதிபராக 35 வயது இளைஞர்..

சிலி நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 35 வயதே ஆன இளைஞர் வெற்றிபெற்றுள்ளது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
x
தென் அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 
35 வயதான இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக போரிக் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் 56 % வாக்குகளை பெற்று கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனிய காஸ்த்தை (Jose Antonio Kast) வீழ்த்தினார். இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிபராகும் பெருமையை போரிக் பெறுகிறார். இன்னும் 3 மாதங்களில் இவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் நிலையில் சிலியில் தற்போதுள்ள சுரங்க திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்