மலேசியாவில் கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்..

மலேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
x
மலேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், 8 மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கீயிருக்கும் ட்ரோன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்