2 தடுப்பூசிகள் செலுத்திய அதிபருக்கு கொரோனா
ஒமிக்ரான் வகை கொரோனா முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
69 வயதான சிரில் ரமஃபோசாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முழுமையாக 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட ரமஃபோசா, கேப் நகரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தனது அதிபர் பொறுப்புகளை துணை அதிபர் டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார்.
Next Story