பக்கவாத நோயால் அசாஞ்சே பாதிப்பு - காதலி தகவல்

இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
 லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. அவர் தற்போது லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ், உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்