ஆப்பிள் & வால்மார்ட் - நம்பர் 1 நிறுவனம் எது ?
சந்தை மதிப்பில் முதல் இடத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தையும், ஆண்டு விற்பனை அளவில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தை பற்றிய ஒப்பீடுகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
புகழ்பெற்ற கம்ப்யூடர் மற்றும் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், பங்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. அதன் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 2.65 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்...ஆண்டு விற்பனையளவில், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ள வால்மார்ட்டின் ஆண்டு விற்பனை 2020 இல் 55,900 கோடி டாலர்களாக இருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 42.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.சில்லரை விற்பனை துறையில் கோலோச்சும் வால்மார்ட் நிறுவனத்திற்கு உலகெங்கும் 24 நாடுகளில் 10,500 விற்பனையகங்கள் உள்ளன. 22 லட்சம் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள் உள்ளனர்.ஆனால் பங்கு சந்தைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38,143 கோடி டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 28.77 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு விற்பனையளவு 2021இல் 36,582 கோடி டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 27.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
Next Story