52 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் தொற்று

உலகம் முழுவதும் 52 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வகை கொரோனோ தொற்றால், மொத்தம் 984 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
52 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் தொற்று
x
உலகம் முழுவதும் 52 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வகை கொரோனோ தொற்றால், மொத்தம் 984 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று, கடந்த மாதம் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது.

இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 52 நாடுகளில் 984 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் அதிகபட்சமாக, 246 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, தென்னாப்பிரிக்காவில் 228 பேருக்கும்,

ஜிம்பாப்வே நாட்டில் 50 பேருக்கும், அமெரிக்காவில் 40 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் 23 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்