காற்றின் மூலம் பரவுகிறதா ஒமிக்ரான்?

ஹாங்காங்கில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு பயணிகளுக்கு ஒமிக்கிரான் தொற்று ஏற்றுப்பட்டுள்ளதால், காற்று மூலம் இது பரவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
x
காற்றின் மூலம் பரவுகிறதா ஒமிக்ரான்? 

ஹாங்காங்கில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு பயணிகளுக்கு ஒமிக்கிரான் தொற்று ஏற்றுப்பட்டுள்ளதால், காற்று மூலம் இது பரவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் உருவாகி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியுள்ள ஒமிக்கிரான் ரக உருமாறிய கொரோனா வைரஸை, கவலையளிக்கும் ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. ஹாங்காங்கிற்கு சென்ற வெளிநாட்டுப் பயணிகள் சிலர் ஒரு தங்கும் விடுதியில் தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். சில நாட்கள் கழித்து இவர்களில் இருவருக்கு ஒமிக்கிரான் ரக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட இவர்கள் இருவரும் தங்களின் அறைகளை விட்டு வெளியேறவில்லை. உணவுகளை பெற அறைக் கதவு திறக்கப்பட்ட போது, காற்று மூலம் ஒமிக்கிரான் வைரஸ் பரவி, இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களுக்கு முதல் முறையாக கொரோனா சோதனை நடத்தப்பட்ட போது பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்