டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரக் அகர்வால், நிர்வாகத்தில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்
x
பிரபல சமூக ஊடக நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவை பூர்விகமாக கொண்ட 37 வயதான பரக் அகர்வால், நவம்பர் 29இல் நியமிக்கப்பட்டார்.  பதவியேற்ற உடனே, டிவிட்டர் நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்களை முன்னெடுத்துள்ளார். டிவிட்டரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டேன்டிலே டேவிஸ் மற்றும் பொறியியல் பிரிவு தலைவர் மைக்கேல் மோன்டனோ ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். மூன்று துணைத் தலைவர்கள், பொது மேலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். பொறுப்புணர்வு, வேகம் மற்றும் செயல் திறன்களை அதிகரிக்க இந்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதாக டிவிட்டர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. டிவிட்டரை தொடங்கியவர்களில் ஒருவரான டோர்சி, திங்களன்று டிவிட்டரின் சமூக ஊடக சேவைப் பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். 
---


Next Story

மேலும் செய்திகள்