35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
x
35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்.. 

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட 18 ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.தென் கொரியா, ஜப்பான், இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவிற்கு அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதை தவிர்த்து அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்