அமெரிக்காவில் ஒமிக்ரான் - 5 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 5 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், 3 மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அந்நாட்டு மக்களை மீண்டும் அச்சமடைய செய்துள்ளது.
x
அமெரிக்காவில் 5 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், 3 மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அந்நாட்டு மக்களை மீண்டும் அச்சமடைய செய்துள்ளது.  

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் நாடாக இருக்கும் அமெரிக்காவில் இதுவரை   4 கோடியே 97 ஆயிரம் லட்சம் பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.  

இந்த நிலையில் புதிய வகை ஒமிக்ரான் பரவல் அமெரிக்காவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில்  தெரியவந்துள்ளது.  

அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் பரவல் கலிஃபோர்னியாவில் கண்டறியப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நேற்று ஒரே நாளில் கொரோனா பரவல் புதிய உச்சமான ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 424 ஆக பதிவாகியுள்ளது. 

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 695 ஆகவும், உயிரிழப்பு ஆயிரத்து 92 ஆகவும் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்