5 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை - கின்னஸ் உலக சாதனை படைத்த குழந்தை

அமெரிக்காவை சேர்ந்த 16 மாத ஆண் குழந்தை ஒன்று, உலகிலேயே மிகவும் குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்த குழந்தை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
5 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை - கின்னஸ் உலக சாதனை படைத்த குழந்தை
x
 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மிச்சேல் என்ற பெண்ணிற்கு 21 வாரங்களிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு பெண் குழந்தை உயிரிழக்க, ஆண் குழந்தையான குர்திஸ் மட்டும் 420கிராம் எடையுடன் உயிரோடு இருந்துள்ளது. அந்த சிசுவை, காப்பாற்ற மருத்துவர்களும், பெற்றோரும் எடுத்த முயற்சி இன்று உலக சாதனை படைத்துள்ளது.  5 மாத குறைபிரசவத்தில் பிறந்த குர்திஸ் தற்பொழுது ஆரோக்கியமான குழந்தையாக வளர்ச்சி அடைந்து வருகிறான். இந்த நிலையில் , உலகிலேயே மிகவும் குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்து, ஆரோக்கியமாக வாழும் குழந்தை என்ற கின்னஸ் சாதனையை குழந்தை குர்திஸ் படைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்